Logo

4 எம்.எல்.ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு

நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உட்பட 4 எம்.எல்.ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்துரை செய்தார்.

இதை ஏற்றுகொண்ட சபாநாயகர்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களான விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோரை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP