வைரஸ் போல் இந்தியாவை சிதைக்கிறது பாஜக: காதர் மொய்தீன்

பா.ஜ.க வின் வைரஸ் தான் இந்தியாவை சிதைத்து கொண்டு இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
 | 

வைரஸ் போல் இந்தியாவை சிதைக்கிறது பாஜக: காதர் மொய்தீன்

பா.ஜ.க. ஒரு வைரஸ் தான் இந்தியாவை சிதைத்து கொண்டு இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மோடி அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து மக்களை ஏமாற்றி உள்ளதாவும், 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதி அளித்தார்களோ அதையே மீண்டும் கூறியிருப்பதாக கூறினார். 

மேலும், ரஃபேல் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு பா.ஜ.க விற்கு ஏற்பட்ட பின்னடைவு என தெரிவித்த அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து எடுக்கப்படும் என கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.முத்தலாக் தடை செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் அதை சட்டமாக்குவோம் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க கூறியுள்ளது. எந்த புனித நூலையும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பா.ஜ.க சிதைக்கப்பார்க்கிறது.

பா.ஜ.க வின் வைரஸ் தான் இந்தியாவை சிதைத்து கொண்டு இருக்கிறது. வட நாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் வந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் என்கிற வேறுபாடு கிடையாது. எனவே தி.மு.க கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். சிறுபான்மை வாக்குகள் சிதறினால் அது பா.ஜ.க விற்குதான் சாதகமாக இருக்கும். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் எண்ணமாக இருக்கிறது.

பா.ஜ.க வை போல் முஸ்லீம் லீக் கட்சி எந்த மதத்தையும் சார்ந்த கட்சி இல்லை. இது அனைத்து மக்களுக்குமான கட்சி,அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் கட்சி. தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சியினரும் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP