3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்!

திருப்பனந்தாள் அருகே அண்ணா நகர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து கிராம மக்கள் இன்று மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்!

திருப்பனந்தாள் அருகே அண்ணா நகர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து கிராம மக்கள் இன்று மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே குறிச்சி ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக குறைவான மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தற்போது, குறைந்த மின் அழுத்தத்தினால் சம்பா சாகுபடி செய்யும் பணிகள் பாதிப்பு, பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிப்பு என அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  குறிச்சியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கும்பகோணம் பந்தநல்லூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா, உதவி மின்வாரிய அலுவலர் பரந்தாமன் (பொறுப்பு) ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP