தாமிரபரணி குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்!

நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் கிராம மக்கள் தாமிரபரணி குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

தாமிரபரணி குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்!

நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் கிராம மக்கள் தாமிரபரணி குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தாமிரபரணி குடிநீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

ஆனால், கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பொறியாளர் அலுவலகம், குடிநீர் வடிகால் வாரியம்,  கிராமசபை கூட்டம் என பல இடத்தில் மனு அளித்தும் எந்த பயனுமில்லை. தற்போது ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்க்கு வாங்கி வருவதாகவும், அப்பகுதியில் 75 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருவதாகவும் மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தாமரபரணி குடிநீரை அப்பகுதி மக்களுக்கு கொண்டு சேர்க்க மாநில அரசும், உள்ளாட்சி துறை நிறுவனங்களும் எந்த முயற்சியும், மேற்கொள்ளப்படாததை கண்டித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP