மயங்கி விழுந்த மூதாட்டியை தூக்கி சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்: வைரலாகும் வீடியோ!

கோவையில் சாலையில் திடீரென மயக்கமடைந்த மூதாட்டியை கையில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 | 

சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் இன்று வழக்கம்போல சிங்காநல்லூர் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் வந்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் சிங்காநல்லூர் சிக்னல் அருகே திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த உறவினர் நிலை தடுமாறி நின்றார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை தூக்கி கொண்டு சாலையின் மறுபுறம் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சாலையில் மயக்கமடைந்த மூதாட்டியை மனிதநேயத்துடன் தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பிய போக்குவரத்து காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP