பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ

மதுரையில் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற நண்பனை ஓட ஓட வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ

மதுரையில் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற நண்பனை ஓட ஓட வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது அண்ணன் ரஞ்சித் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அவரது நண்பர்களே அஜித்தை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தல்லாகுளம் காவல் துறையினர் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். 

இதனிடையே, கடந்த 13ஆம் தேதி விக்னேஷ் மற்றும் வின்செட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்த படுகொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP