வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை

நீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் வைகை ஆற்று படுகையில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
 | 

வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை

நீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் வைகை ஆற்று படுகையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் கணிசமாக நிரம்பி வருகிறது.

இதனையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் எங்கிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிரம்பி வழிந்த வண்ணம் குளம் போல் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட வைகை ஆறு, மதுரையில் கடந்த சில தினங்கள் பெய்த மழையின் காரணமாக நிரம்பி காட்சியளிக்கிறது.

மதுரையின் ஸ்மார்ட் திட்டத்தின்கீழ் வைகையின் குறுக்கே தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் நிரம்பிய மழை நீர் தடுப்பணையை கடக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் காட்சியளிக்கிறது. 

நீண்ட மாதங்களுக்கு பிறகு வைகை ஆற்றின் படுகையில் தண்ணீர் நிரம்பியதால் சிறு செடிகள், ஆகாய தாமரை வேர்கள், குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனை பொதுமக்கள் வைகை ஆற்று பாலத்தின் மேல் இருந்தும், வைகை கரையோரமிருந்தும் மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர்.

மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக நிலத்தடிநீர் கணிசமாக உயர்வதால் பொதுமக்கள், சோளம், மல்லிகைப்பூ போன்ற சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 <>

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP