காலியாக உள்ள லஷ்கர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்: பொதுப்பணித்துறை

லஷ்கர் எனப்படும் கரை காவலர் பணிக்கான காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பொதுப் பணித்துறை முதன்மை செய லாளர் தெரிவித்துள்ளார்.
 | 

காலியாக உள்ள லஷ்கர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்: பொதுப்பணித்துறை

லஷ்கர் எனப்படும் கரை காவலர் பணிக்கான காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி எட்டு மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து ரூ.387.60 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் புதிய மேலணை  கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணியை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

மேலும், ரூ 38.85 கோடியில்  110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும்  பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணி துறை முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலியாக உள்ள லஷ்கர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்: பொதுப்பணித்துறை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் விரைவாக நடைப்பெற்று வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் அந்த பணிகள் நிறைவடையும். எவ்வளவு கன அடி தண்ணீர் வந்தாலும் தாங்க கூடிய வகையில் இந்த தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.

காவிரி நீர்வரத்து தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், விவசாயிகளும் கவலைப்பட தேவையில்லை.

நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகிறது. கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை 2021 மார்ச் மாதம் நிறைவடையும். லஷ்கர் எனப்படும் கரை காவலர் பணிக்கான காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்" என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP