பிரதமர் யார் என கூறமுடியாத கட்சிகள் வாக்கு சேகரிக்கின்றன: அமைச்சர் உதயக்குமார்

அவர்கள் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் எனக்கூற முடியாத கட்சிகள் எல்லாம் வாக்கு கேட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 | 

பிரதமர் யார் என கூறமுடியாத கட்சிகள் வாக்கு சேகரிக்கின்றன: அமைச்சர் உதயக்குமார்

ஆட்சியமைக்க நேர்ந்தால் அவர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதமர் வேட்பாளர் யார் எனக்கூற முடியாத கட்சிகள் எல்லாம் வாக்கு கேட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அ.தி.மு.க.செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் 3 நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சிக்காக பணியாற்றி இருப்பதாகவும், அவர் ஓ.பி.எஸ் மகன் என்பதை தவிர அவர் மீது வேறு எந்த குறையும் கூறமுடியாது எனவும் தெரிவித்தார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி.தினகரன் வெற்றி பெற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கு மற்றும் உழைப்பு தான் காரணம் என்பது மக்களுக்கு தெரியும் என கூறிய அவர், ஆட்சியமைக்க நேர்ந்தால் அவர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதமர் வேட்பாளj் பிரதமர் யார் எனக்கூற முடியாத கட்சிகள் எல்லாம் தேர்தலில் வாக்கு கேட்டு வருவதாகவும், ஆனால் அ.தி.மு.க. கூட்டணி நரேந்திர மோடி தான் பிரதமர் எனக்கூறி வாக்கு கேட்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP