தஞ்சையில் அரசு பெண் ஊழியர் உட்பட இருவர் வெட்டிக் கொலை!

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர் வனிதா மற்றும் கனகராஜ் ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தஞ்சையில் அரசு பெண் ஊழியர் உட்பட இருவர் வெட்டிக் கொலை!

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர் வனிதா மற்றும் கனகராஜ் ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த காமராஜ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி வனிதாவிற்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. வனிதா தனது மூன்று குழந்தைகளுடன் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுடன் கனகராஜ் என்பவரும் வசித்து வந்துள்ளார். கனகராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் திரிவேதிகுடுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வனிதா மற்றும் கனகராஜ் இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வனிதா அவரது  சித்தி மகன் பிரகாஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்று ரூ.1.5 லட்சம் கொடுத்த நிலையில் மீதமுள்ள ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு பலமுறை வனிதாவின் கன்னத்தில்அறைந்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுக்காத பட்சத்தில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் வனிதா மீது புகார் அளித்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதனால் பணப்பிரச்சனை காரணமாக பிரகாஷ் கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP