கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகள் பறிமுதல்!

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம் பகுதியில் காவல்துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளாவில் இருந்து வந்த இரண்டு லாரிகளில், முழுக்க கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது
 | 

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகள்  பறிமுதல்!

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகள் கோவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம் பகுதியில் காவல்துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளாவில் இருந்து வந்த இரண்டு லாரிகளில், முழுக்க  கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போத்தனூர் காவல்துறையினர் இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

அந்த லாரிகளில்  இருப்பது  மருத்துவ கழிவுகளா அல்லது வேறு வகையான கழிவுகளா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது கோவையில் உள்ள  குடோனிற்கு லாரியில் கழிவுகளை ஏற்றி வந்ததாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP