பட்டப்பகலில் இருவரை படுகொலை செய்த கும்பல் சிறையில் அடைப்பு!

கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 | 

கடந்த மே 14 ஆம் தேதி கோவை - அவிநாசி சாலையின் பிரதான பகுதியில், பட்டப்பகலில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்த  பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பந்தய சாலை காவல்துறையினர், தனபால், சஞ்சய், மணிகண்டன், சதீஷ்குமார், சூர்யா, ஜெகதீஷ், ராஜேஷ், ஹரி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில்,  பொதுமக்களை பீதியடையச் செய்து நடுசாலையில் அரிவாளால் வெட்டிய குற்ற செயலுக்காகவும், இக்கொடூரமான குற்ற செயல்களை தடுக்கும் நோக்கத்திலும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், 8 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

https://www.newstm.in/news/tamilnadu/district/63058-four-people-arrested-for-attempt-murder.html

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP