சேலம் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன், பட்டறை தொழிலாளி ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன், பட்டறை தொழிலாளி ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக, சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி காந்தி நகரை சேர்ந்த பட்டறை தொழிலாளி தங்கராஜ் (45), தனது மனைவி வீரம்மாள் (34) மற்றும் மகள்கள் கார்க்கி (14), காந்த வர்ஷினி (12) ஆகியோருடன் வந்தார். பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த, மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி, குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாததால் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து, குடும்பத்துடன், தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு, தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP