திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சிகொடுத்த திரிபுரசுந்தரி அம்பாள்

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் சிறப்பு வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
 | 

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. துலாபாரம் உடைய சிவஸ்தலம் என்ற பெருமையுடைய இக்கோயிலில் ஆழ்வார்களுக்கு அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி கொடுத்த வரலாற்று சிறப்பு உண்டு.

இதனை நினைவு கூறும் வகையில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையான 28ஆம் தேதி இரவு  அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சி கொடுக்கும் ஐதீக வைபவம் சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது. 

திரிபுரசுந்தரி அம்பாள் வெங்கடாஜலபதி பெருமாளாக  அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. பூஜைகளை தியாகராஜ சிவாச்சாரியார் செய்வித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். 

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரண்யா, கிராம மக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. விஜயதசமியன்று அம்புவிடும் வைபவம் நடைபெறுகிறது.

newstm.in<>

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP