திருச்சி: விவசாய நிலத்தில் புதையல்? தேடுதல் வேட்டையில் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி பொதுமக்கள் ஜேசிபி எந்திரம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

திருச்சி: விவசாய நிலத்தில் புதையல்? தேடுதல் வேட்டையில் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி பொதுமக்கள் ஜேசிபி எந்திரம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அழகாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரது விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாகவும் கோயிலுக்கு சொந்தமான சொம்பு கலசம், சிலைகள் இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் அருள் வாக்கு மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து புதையல் இருப்பதாக கருதப்பட்ட இடத்திற்கு ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் அங்கு பூசணிக்காய் வெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜேசிபி எந்திரம் மூலம் விவசாய நிலத்தில் இருந்த மண் முகடு தோண்டிப் பார்க்கப்பட்டது. தீவிர தேடுதலில் சுவாமி சிலைகளை புதையலும் எதுவும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினர் வந்தனர்.

அவர்கள் உரிய அனுமதி இன்றி நிலத்தை தோண்டுவது புதையல் தேடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் முறையாக வருவாய் துறையினரிடம் அனுமதி பெற்று அதிகாரிகள் முன்னிலையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் கூறினர். மேலும், அந்த நிலம் ஊர் மக்களுக்கு சொந்தமானது என்பதற்கான உரிய ஆதாரம் இருந்தால் கிடைக்கும்  கோயில் பொருட்களை ஊர் மக்களுக்கு தருவதாகவும், அரசுக்கு சொந்தமானதாக இருந்தால் அரசு கையகப்படுத்தும் என்றும் விளக்கமளித்தனர்.

இதை அடுத்து புதையல் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புதையல் தேடும் பணியில் அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP