திருச்சி:  பிச்சை தர மறுத்தவரின் மண்டையை  உடைத்த திருநங்கைகள்!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிச்சை தர மறுத்த வலிபரை 5 திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கற்களை வீசி மண்டையை உடைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
 | 

திருச்சி:  பிச்சை தர மறுத்தவரின் மண்டையை  உடைத்த திருநங்கைகள்!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிச்சை தர மறுத்த வலிபரை 5 திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கற்களை வீசி மண்டையை உடைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சத்திரப்பட்டி வரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த வாலிபர் ஒருவர் 
திருநங்கைகளுக்கு  பிச்சை தர மறுத்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அவரை வசை பாடி உள்ளனர் இதற்கு அந்த வாலிபர் நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, ஐந்திற்கும்  மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றிணைந்து அவரை தாக்கியுள்ளனர்
இதனால் நிலைகுலைந்த அந்த வாலிபர் செய்வதறியாது தவித்து உள்ளார். பின்னர் பேருந்திலிருந்து இறங்கி கீழே வந்த அந்த வாலிபரை திருநங்கைகள் கற்களால் தாக்கியதில்  மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

இதனை அங்கு நின்ற ஒருவர் வீடியோ மூலம் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது.  தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்குள்ள காவல் நிலையத்தில் இவரது புகார் பெறப்பட்டது.

திருச்சி:  பிச்சை தர மறுத்தவரின் மண்டையை  உடைத்த திருநங்கைகள்!

இருப்பினும் கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த சம்பவம் அறிந்த காவல்துறை ஆய்வாளர் சம்பந்தப்பட்ட திருநங்கைகளை அழைத்து மன்னிப்பு கேட்க கூறியுள்ளார் இதனடிப்படையில் திருநங்கைகள் தாக்குதலுக்கு உள்ளான வாலிபரை புகாரை திரும்பப் பெற கூறியும். இதுபோன்று நாங்கள் இனி செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஆனால் தாக்குதலுக்குள்ளான வாலிபர் தற்போது இந்த புகாரை வாபஸ்  வாங்காமல் உள்ளார் மேலும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..

எதற்காக திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பார்க்கும்போது. திருநங்கைகளுக்கு என சிறைச்சாலை திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளது இங்கு கைது செய்யப்படும் திருநங்கைகளை லால்குடி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் புகார் கொடுப்பவர்கள் தொடர்ந்து அந்த புகாரை முறையாக கொடுப்பதில்லை வழக்கு பதிந்தால் நீதிமன்றத்திற்கு  அலைய வேண்டி இருப்பதால் புகார்தாரர்கள் அதிக அளவில் திருநங்கைகள் மீது புகார் அளிப்பதில்லை என கூறப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP