திருச்சி: லலிதா நகைக் கடை, வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷிற்கு போலீஸ் காவல்!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றவாளி சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 | 

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ரிதன் என்பவர் வீட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளே இந்த குற்றங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர், பாலக்கரை காவல்நிலையத்திற்கு   உட்பட்ட ஒரு வெல்டிங் பட்டறையில் திருடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பாலக்கரை போலீசார் ஒருவாரம் போலீஸ் கஸ்டடி கேட்டு, நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்- 5 நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் 5 நீதிபதி திரு.பாலகிருஷ்ணன், 2 நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP