திருச்சி: பூங்கா திறப்பு விழாவில் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்

திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பொதுமக்கள் வழிமறித்து முறையான சாலை வசதி செய்துதரும்படி கோரிக்கை விடுத்தனர்.
 | 

திருச்சி மாவட்டம் கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள் பூங்காவை உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து தில்லை நகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தையும், மத்திய பேருந்துநிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தையும் அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார் 

முன்னதாக, பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ள காரில் வருகை தந்த அமைச்சர் வேலுமணியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பூங்கா திறப்பு விழாவிற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சிறிதுதூரம் மட்டுமே புதுப்பிக்கப்பட்டள்ளதாகவும், முறையாக முழு சாலையையும் சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP