திருச்சி :கமிஷனுக்கு ஆசைப்பட்டு  தங்கம் கடத்தி வந்த  தாய் - மகன் கைது 

கமிஷனுக்கு ஆசைப்பட்டு மலேசியவிலிருந்து தங்கம் கடத்தி வந்த தாய் -மகனிடம் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ,மலேசியாவைச் சேர்ந்த கஸ்தூரி பட்டுமலை என்ற பெண்மணியும் அவரது மகன் 
குமரன் தனிமலையும் தங்களது கைப்பையில் 593 கிராம் எடை  கொண்ட ரூபாய் 21 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள வளையல், செயின்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில்., தீபாவளி பர்சேஸ்காக திருச்சி வந்த அவர்களிருவரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.  இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP