திருச்சி நகைக்கடை கொள்ளை: சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை சம்பவ வழக்கை கண்டறிய சிறப்பாக பணியாற்றிய திருவாரூர் நகர காவல்நிலைய காவலர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
 | 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுமார் ரூ.13 கோடிமதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக திருச்சி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதநேரு தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியன் , இளங்கோ , தலைமை காவலர்கள் காமராஜ் , ரவி , முதல் நிலை காவலர் சுந்தரராமன் , காவலர் ரகுவரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகபடும் படியாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் திருச்சி லலிதா நகை கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜூ, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜே.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி கொள்ளை சம்பவ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க உதவிய காவலர்களுக்கு நேற்று நற்சான்றிதழ்களும், வெகுமதியும் வழங்கி பாராட்டினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP