திருச்சி: ரூ.2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் !

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 | 

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.  அதில் ஏற இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரது உடமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தபோது அவரது உடைமையில் சுமார் பத்து கிலோ போதைப் பொருள் இருந்ததை கண்டறிந்தனர்.  அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதனைக் கூடங்களில் பரிசோதனை செய்தபோது “மெத்தகொலன்” என்ற போதை பொருள் என்றும் இதன் மதிப்பு சுமார் 2.5 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். 

இதனை  தொடர்ந்து குழந்தை சாமியிடம் விசாரணை நடத்தியபோது அவர் இந்த போதைப் பொருளை மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP