திருச்சியில் கோடிக்கணக்கில் காசோலை சிக்கியது: மாவட்ட ஆட்சியர் தகவல் !

திருச்சி திருப்பராய்த்துறை டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட கோடிக் கணக்கான மதிப்பிலான காசோலைகள் சிக்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
 | 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக பறக்கும் படை நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். 

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று (வியாழக்கிழமை) திருச்சி திருப்பராயத்துறை டோல்கேட்டில் வாகன தணிக்கையின் போது, ஒரு மகேந்திரா வாகனத்தில் 192 காசோலைகளில் கையெழுத்து போடப்பட்ட 8 கோடியே, 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காசோலைகளும், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புரோநோட்டும், 70 லட்சத்தில் ஒரு புரோநோட்டும் இருந்தது தெரிய வந்தது. 

உரிய ஆவணங்கள் காண்பிக்கப்படாததால், காசோலைகளும், புரோநோட்டுகளும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கணகமமாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டாதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP