Logo

திருச்சி மத்திய சிறை: மண்பானையில் பொங்கலிட்டு மண்சட்டியில் உணவு பறிமாறல்...

திருச்சி மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானையில் பொங்கலிட்டு, மண் சட்டி, குவளைகளில் உணவு பொருட்களை பரிமாறி கொண்டாடினர். வரும் 17ம் தேதி வரை மண்சட்டியில் உணவுகள் பரிமாறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

திருச்சி மத்திய சிறை: மண்பானையில் பொங்கலிட்டு மண்சட்டியில் உணவு பறிமாறல்...

திருச்சி மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானையில் பொங்கலிட்டு, மண் சட்டி, குவளைகளில் உணவு பொருட்களை பரிமாறி கொண்டாடினர். 

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், சிறைத்துறை சார்பில் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறை அங்காடியில் சிறைக் கைதிகளால் தயாரித்து விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள், உணவு வகைகள் மற்றும் துணிப்பைகள், சட்டை, வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மத்திய சிறை: மண்பானையில் பொங்கலிட்டு மண்சட்டியில் உணவு பறிமாறல்...

மேலும், பொங்கல் விழாவையொட்டி இன்று பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறைகண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் சிறைக்காவலர்கள் கலந்துக்கொண்டு மண்பாணையில் பொங்கலிட்டு பின்னர் சிறை அங்காடியில் உணவருந்த வரும் பொதுமக்கள், வாடிக்கையாளர்களுக்கு மண்சட்டியில் பொங்கல் வழங்கியும், மண்குவளையில் குடிநீர் வழங்கியும் சூழல் பொங்கலை சிறப்புடன் கொண்டாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மண்பானையில் சமைத்து பரிமாறப்பட்ட உணவுப்பொருட்களை ருசித்து மகிழ்ந்தனர்.

திருச்சி மத்திய சிறை: மண்பானையில் பொங்கலிட்டு மண்சட்டியில் உணவு பறிமாறல்...

இன்று முதல் வரும் 17ம் தேதி வரை அங்காடிக்கு வரும் பொதுமக்களுக்கு மண்சட்டியில் உணவு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் மக்களின் வரவேற்பினைப் பொருத்து தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சிறை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP