திருச்சி: தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் சேதம்- போலீஸ் விசாரணை

திருச்சி உறையூரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. குடிசை வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே மர்ம நபர்கள் தீ வைத்ததாக பொதுமக்கள் புகார்
 | 

திருச்சி:  தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் சேதம்- போலீஸ் விசாரணை

திருச்சி உறையூரில் ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் அருகே உள்ள தெற்கு வெள்ளாளர் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக பலர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா இல்லாமல் வசிப்பதாக அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் புகார் தெரிவித்து வந்ததாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று  குடிசை வீட்டில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவென பரவியதில் அருகில் இருந்த 5 குடிசை வீடுகளும் எரிந்து சேதமாகின. குடிசை வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே  மர்ம நபர்கள் தீ வைத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து  உறையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் ஒரு வீடு தீ பிடித்து எரிந்த நிலையில் இன்று 5 வீடுகள் தீயினால் கருகியதால் இப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP