திருச்சி: லாரி மீது அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - 2 பேர் உடல் நசுங்கி பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு மற்றும் தனியர் பேருந்துகள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
 | 

மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் மைய தடுப்பு அருகே இரும்பு கம்பி ஏற்றிசென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து 10 பயணிகளுடன் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. 

அரசு பேருந்தை தொடர்ந்து வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பேருந்து லாரியின் பின் பகுதியில் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், லாரி கிளினர் உட்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து தனியார் பேருந்து வந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

திருச்சி: லாரி மீது அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - 2 பேர் உடல் நசுங்கி பலி!

மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேர் மற்றும் படுகாயமடைந்த 3பேர் உட்பட 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் லாரி கிளினர் ஆகியோரின் உடல்களை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

திருச்சி: லாரி மீது அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - 2 பேர் உடல் நசுங்கி பலி!

லாரி கிளினர் லாரி மற்றும் பேருந்துக்கு இடையே இடிபாடுகளுக்குள் சிக்கியதால் உடல் இரண்டு துண்டாகி சிதைந்துபோனது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP