மரங்கள் குழந்தைகளுக்கு சமம்: தலைமை நீதிபதி வினித் கோத்தாரி

மரத்தை வளர்ப்பது என்பது குழந்தைகளை வளர்ப்பதற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
 | 

மரங்கள் குழந்தைகளுக்கு சமம்: தலைமை நீதிபதி வினித் கோத்தாரி

மரத்தை வளர்ப்பது என்பது குழந்தைகளை வளர்ப்பதற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் கோத்தாரி தெரிவித்துள்ளார். 

சென்னையில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் கோத்தாரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மரம் நடும் முயற்சியை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஒவ்வொருவரும் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்றும் கூறினார். மரங்கள் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர், இதுவரை 40 மரங்களை வளர்த்துள்ளதாகவும், ஒரு மரத்தை வளர்ப்பது என்பது  ஒரு மகன் அல்லது மகளை வளர்ப்பதற்கு சமமாகும் என்றும் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP