மதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்!

வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதையொட்டி, மதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்!

வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதையொட்டி, மதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.  

மதுரை மக்களவை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான நாகராஜன் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர்.

மதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்!

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் நாகராஜன், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்படும். நாளை காலை 8 மணி வரை வரும் தபால் வாக்குகள்  எண்ணப்படும். தபால் வாக்குப்பதிவை எண்ணுவதற்கு 4 மேஜைகள் அமைக்கப்படும்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வி.வி.பேட் இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்பட்டு அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நுண் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி உள்ளது, மேற்பார்வையாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் அலுவர்கள் உள்ளிட்டோர் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

நேற்று மின்னணு நகல் இயந்திரம் அனுமதி இல்லாமல் கொண்டு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக புகார் அளித்தவருக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 15 சிசிடிவி கேமரா 4 கணினி இரண்டு நகல் எடுக்கும் இயந்திரம் வைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சற்று தாமதமாக தரப்பட்டாலும் தவறில்லாமல் துல்லியமாக தருவது எங்களது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையம் மட்டுமல்லாமல் மாநகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP