கோவையில் பாரம்பரிய பொங்கல்...!

கோவை பி எஸ் ஜி கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ் பாரம்பரிய முறைப்படி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் கொண்டாடப்பட்டது. மாணவ,மாணவிகள் கைத்தறி கொண்ட புடவைகள் மற்றும் வேஷ்டிகளில் இருந்தது காண்போரை கவர்ந்தனர்.
 | 

கோவையில் பாரம்பரிய பொங்கல்!

கோவை பி எஸ் ஜி கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ் பாரம்பரிய முறைப்படி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் கொண்டாடப்பட்டது.

கோவை பி எஸ் ஜி தொழில் நுட்ப கல்லூரியில் பொங்கல் பண்டிகை பாரம்பரிய முறைப்படி கிராமத்து பொங்கலாக கொண்டாடினர் .மேலும் இவ்விழாவில் கிராமத்தில் உள்ளது போலவே வைக்கோல் வைத்து மண்பானையில்  பொங்கல் வைத்து கொலைவைகள் போட்டு சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து முன்னோர் காலத்தில் செயல்பட்டதை கடைபிடிக்கும் வகையில் கயிறு இழுத்தல்,கட்டவண்டி ஓட்டுதல், இளநீர் குடித்தல்,கிளி ஜோசியம் பார்த்தால் என கிராமத்தில் வாழும் மக்களை போலவே செயல்பட்டனர். 

மேலும் விளையாட்டு போட்டிகளுக்கு இடையே  மாணவ,மாணவிகளின்  ஒயிலாட்டம், கோலா போட்டிகள், தோரனங்கள்,கும்மி  கலாச்சார பாடல்களுக்கு ஆடிய  நிகழ்ச்சிகள் காண்போர் கண்களுக்கு விருந்தளித்தன. மேலும் ஆடவர்களுக்கான உரிஅடித்தல் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவ,மாணவிகள் கைத்தறி கொண்ட புடவைகள் மற்றும் வேஷ்டிகளில் இருந்தது காண்போரை கவர்ந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP