கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கன்னியாகுமரியில், சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 | 

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாலும், கடலின் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இன்று அறிவித்துள்ளது.

மேலும், வானிலை மற்றும் கடலின் தன்மை சீரானதும் படகு போக்குவரத்து சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP