டிக்கெட் விவகாரம்; பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது!

நாகர்கோவில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை பிரிவு காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

டிக்கெட் விவகாரம்; பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது!

நாகர்கோவில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய நெல்லை ஆயுதப்படை காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகர்கோவில் அரசு பேருந்தில் நெல்லை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்கள் ஏறியுள்ளனர். அப்போது, பணியில் இருந்த இடலாகுடியை சேர்ந்த பேருந்து நடத்துனர் ரமேஷ் அவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு காவலர்களுக்கான இலவச பேருந்து அட்டை இருப்பதாக கூறியுள்ளனர். அதனை எடுக்குமாறு நடத்துனர் கூறியுள்ளார்.

பின்பு அனைவரிடமும் டிக்கெட் வாங்கி விட்டு மீண்டும் காவலர்களிடம் வந்து அடையாள அட்டையை காட்டுமாறு கூறியபோது, காவலரில் ஒருவர் பேருந்திற்குள் வைத்தே நடத்துனரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்நிலையில், இச்சம்பத்தில் தொடர்புடைய நெல்லை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த  இரு காவலர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் மற்றும் தமிழரசனை கைது செய்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP