திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கு வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் சீல் வைப்பக்கப்பட்டது.
 | 

திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

திருச்சி மக்களவைத் தொகுதியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைப்பக்கப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருச்சி - மதுரை  சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு  அவை 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. திருச்சி தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1660 - வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டு, பின்னர் அந்த அறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

ஒவ்வொரு அறைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 4 பேரும், துணை ராணுவ படையினரும் என மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட இருப்பதுடன், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP