Logo

இந்த மழைக்கே மூழ்கிய சென்னை! வைரலாகும் வீடியோ!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு பெய்த மழைக்கே சென்னையில் பைக் நீரில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

இந்த மழைக்கே மூழ்கிய சென்னை! வைரலாகும் வீடியோ!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு பெய்த மழைக்கே சென்னையில் பைக் நீரில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கே சென்னையில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது. சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலையில் பைக் ஒன்று நீரில் விழுந்து, அதை எடுக்கும் பலர் முயற்சிப்ப்பதை போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கே பெய்த மழைக்கே சென்னைக்கு இந்த நிலைமை என்றால், ஒருவாரம்  மழை தொடர்ந்து பெய்தால், சென்னை என்னவாகும் என்று பொதுமக்கள் தங்களின் அச்சத்தை தெரிவித்தனர்.

 <>

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP