திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு!

திருவள்ளூர், அம்பத்தூர் அருகே மெடிக்கலில் ஊசி போட்டு கொண்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு!

திருவள்ளூர், அம்பத்தூர் அருகே மெடிக்கலில் ஊசி போட்டு கொண்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே உள்ள மாதளா குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவர் டெய்லராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் குமாருக்கு கடந்த சில நாட்களாக தோள்பட்டையில் வலி இருந்துள்ளது. மாத்திரை எடுத்தும் குறையாததால் அருகில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்று மெடிக்கல் உரிமையாளரிடம் கூறியுள்ளார். 

இதையடுத்து அந்த மெடிக்கல் உரிமையாளர் அவருக்கு வலி குறைய ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே குமாருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார்,  மெடிக்கல் ஷாப் உரிமையாளர் பாஸ்கரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP