திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை கபாலீஸ்வரர் கோவில் சிலை மாற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அறைநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 | 

சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இருந்த பழமையான மரகத மயில் சிலை மாற்றப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே, திருமகள் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திருமகளை கைது செய்தனர். இதையடுத்து இன்று  கைது செய்யப்பட்ட அறைநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள்  கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP