ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை உள்ளது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை தோழமைக் கட்சிகளுக்கு இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை உள்ளது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை தோழமைக் கட்சிகளுக்கு இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, லாபம் வரும் திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையோடு பேசி தேர்தலை சந்திப்போம் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை தோழமைக் கட்சிகளுக்கு இருக்கிறது என கூறினார். 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் இடையே போட்டி இருப்பதால்தான் இருவரும் மாறி மாறி வெளிநாடு செல்கிறார்கள் என கூறிய திருநாவுக்கரசர், அப்படியவாது தமிழக மக்களுக்கு நன்மைகள் மற்றும் வளர்ச்சி இருந்தால் வரவேற்புக்குரியது என தெரிவித்தார்.  திருவள்ளுவர், அகத்தியர், அவ்வையார், தொல்காப்பியர் போன்று பட்டியல் நீளாமல் மக்கள் நலனில் பாஜக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் காவி உடை மீதான விவகாரத்தில் மக்கள் தமாஷாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். வெட்டி வேலைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஈடுபடாமல் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று நினைக்க வேண்டுமே தவிர வேஷம், கோஷம் எல்லாம் தமிழ்நாட்டுக்கு தோஷம் என தெரிவித்தார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP