உருக்கமான கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை.. காரணத்தால் அதிர்ந்த காவல்துறை

உருக்கமான கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை.. காரணத்தால் அதிர்ந்த காவல்துறை
 | 

உருக்கமான கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை.. காரணத்தால் அதிர்ந்த காவல்துறை

சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மகள் கீர்த்தனா(18) தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது. பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி கீர்த்தனா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெடுஞ்நேரத்திற்கு பிறகு அறையின் கதவை உடைத்து பார்த்தப்போது அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

உருக்கமான கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை.. காரணத்தால் அதிர்ந்த காவல்துறை

இதனையடுத்து உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அவரது அறையில் இருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது பெற்றோர் என்னை மிகவும் சிரமப்பட்டு என்னை கல்லூரில் படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை” என அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP