பெண்ணின் தற்கொலையில் மர்மம்; உடலில் இருக்கும் காயங்கள் குறித்து போலீஸ் விசாரணை

கோவையில், அரசு செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 | 

கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை அருகே உள்ள ஸ்ரீனிவாசன் நகரை சேர்ந்தவர் முரளி சங்கர் (27). இவர் திருமணமாகி தனது மனைவி பாண்டி மீனா(24) மற்றும் 3வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், பாண்டிமீனா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் பெண் வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மீனாவின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதனால் பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த மீனாவின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

பெண்ணின் தற்கொலையில் மர்மம்; உடலில் இருக்கும் காயங்கள் குறித்து போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன் கணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், மீனாவின் இறப்பு குறித்து கணவர் முரளி சங்கர் மற்றும் மாமனார் கணேஷை காவல் நிலையத்தில்  வைத்து விசாரித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP