கள்ளக்காதலி வீட்டில் உல்லசமாக இருந்த இளைஞர்.. நிர்வாணமாக ஓடிய பரிதாபம்..

சென்னை கொடுங்கையூரில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடி கையும், களவுமாக மாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
 | 

கள்ளக்காதலி வீட்டில் உல்லசமாக இருந்த இளைஞர்.. நிர்வாணமாக ஓடிய பரிதாபம்..

சென்னை கொடுங்கையூரில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடி கையும், களவுமாக மாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கமராஜர் சாலை, காந்தி நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் நிர்வணமாக செல்வதை கண்ட பொதுமக்கள் அவரை பிடிக்க கட்டைகளுடன் துரத்தியுள்ளனர். மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவம் நடந்த அன்று, அவர் காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உல்லசமாக இருந்தபோது, அவரது வீட்டிற்கு யாரோ வருவது போன்ற சத்தம் கேட்டதால் பயந்து ஆடையில்லாமல் பின்பக்கம் வழியாக ஓடியுள்ளார். பிறகு அவரது உடைகளையும், செல்போனையும் எடுக்க மறுபடியும் அங்கு சென்றபோது, பொதுமக்கள் அவரை துரத்தியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP