காதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை

காதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை
 | 

காதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை

சேலத்தில், காதலை மறைக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய இளம்பெண்ணை, திருநங்கை பிரம்பால் அடித்து விளாசியுள்ளார்.

 
சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கட்டிய திருநங்கை ஒருவர் பூசாரியாக உள்ளார். கோவிலில் பக்தர்களுக்கு திருநங்கை அருள்வாக்கு கூறுவது உண்டு. இதனால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அருள்வாக்கு பெறுவதற்காக இங்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பேய் பிடித்ததாக கூறி, அந்த பெண்ணின் பெற்றோர் திருநங்கை பூசாரியாக உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவிலில் இளம்பெண்ணுக்கு, திருநங்கை பேய் ஓட்ட தொடங்கினார். அப்போது அவர் பல்வேறு அம்மன் பெயர்களை சொல்லி பெண்ணின் மேல் இருக்கும் பேயை ஓடிவிடும்படி எச்சரிக்கை விடுத்தார். அதற்கு அந்த பெண் பேய் தன்மேல் இருப்பது போல் காட்டிக்கொண்டார். இதைப்பார்த்த திருநங்கை நீ எந்த ஊரு பேய்? உன்பெயர் என்ன? என்று திருநங்கை கேட்டபோது, அந்த பெண் ஒரு பெயரை கூறினார். இதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தையிடம் இது யார் பெயர் என திருநங்கை கேட்டபோது, அது தன்னுடைய மகள் பெயர் தான் என்றார். இதனால் திருநங்கை ஆத்திரமடைந்தார். பின்னர் தயாராக வைத்திருந்த பிரம்பால் அடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் சத்தம்போட தொடங்கினார். தடுக்க வந்த பெற்றோர்களை திருநங்கை அதட்டியதால் அவர்கள் அமைதியாகி விட்டனர். இறுதியாக அந்த இளம்பெண், ஒருவரை காதலிப்பதாகவும், அதனை மறைக்க பேய் பிடித்ததாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொய் சொல்லமாட்டேன் என அந்த பெண் தன்னுடைய தந்தையை தாண்டி சத்தியம் செய்தார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP