பெற்ற குழந்தையை நடுரோட்டில் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன பெண்!

மதுரையில், பெற்ற மகனை கழற்றிவிட்டு விட்டு தாய் கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பெற்ற குழந்தையை நடுரோட்டில் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன பெண்!

மதுரையில், பெற்ற மகனை நடுரோட்டில் விட்டு தாய் கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் மூன்று வயது சிறுவன், பெற்றோரை தேடி அழுது கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் சிறுவனை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அவரது தந்தை நடராஜிடம் ஒப்படைத்தனர். அதே சமயத்தில் பாலாஜி தனது மனைவி சுகன்யாவை காணவில்லை என பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மந்திரி மேனன் தெருவை சேர்ந்த பாலாஜிக்கும், சுகன்யாவுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று வயதில் நடராஜ் என்ற மகன் உள்ளான். சுகன்யா சில வருடங்களாக ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவருடன் அடிக்கடி போனில் பேசிவந்துள்ளார். இதனை கணவர் பாலாஜி கண்டித்துள்ளார்.

இதனால் சிறிது நாட்களாக அந்த நபருடன் தொடர்பை துண்டித்து வந்த நிலையில், மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சுகன்யா, மகன் நடராஜை அழைத்து கொண்டு மதுரை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு மகனுடன் வந்திருந்த சுகன்யாவை அவரது காதலன் இருசக்கரவாகனத்தில் அழைத்துக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார். சிலைமான் காவல் நிலையம் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றதும் சிறுவனை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். குழந்தை. அம்மா... அம்மா... என கதறி அழுதும் சற்றும் கண்டுக்காமல் சென்றது" தெரியவந்துள்ளது. தற்போது, மொபைல் எண் மூலம் சுகன்யா  இருக்கும் இடத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP