காரை அடமானம் வைத்தவரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்- போலீஸ் வலைவீச்சு

கோவையில் அடமானத்திற்கு கார் கொடுத்த இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு கடத்தி சென்று தாக்கிய கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
 | 

காரை அடமானம் வைத்தவரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்- போலீஸ் வலைவீச்சு

கோவையில் அடமானத்திற்கு கார் கொடுத்த இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு கடத்தி சென்று தாக்கிய கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

கோவை குனியமுத்தூர் முத்துசாமி வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய இரு சக்கர வாகனம் மற்றும்  கார்களை அடமானம் வைப்பவர்களிடம் காரை பெற்று பணம் வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இவர் வாங்கும் கார்களை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் சிலரிடம் வழக்கமாக கொடுத்து பணம் பெற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுக்கரை சலீம் என்பவரிடம் இனோவா காரை அடமானத்திற்கு பெற்றுள்ளார். மேலும் அந்த காரை கரும்புக்கடையை சேர்ந்த சதாம் உசேனிடம் கொடுத்து ரூ.4 லட்சம்  பெற்றுள்ளார்.

இந்நிலையில், இரண்டும் மாதம் கழித்து சதாம் உசேன் மணிகண்டனை அழைத்து அடமானம் வைத்த காரை சென்னையை சேர்ந்த யாரோ எடுத்து சென்று விட்டதாகவும், உடனடியாக 5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு உள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் வீட்டில் இருந்த மணிகண்டனை சதாம் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி சென்று, சதாமின் வீட்டில் வைத்து மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சலீமை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை அவரது உறவினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சதாம், இம்ரான், முன்னா, சுல்தான், சானவாஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் , தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். காவல்துறையினரிடம் சிக்கிய சானவாஸை குனியமுத்தூர்  போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP