படுகாயமடைந்த மானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டே ஓட்டுநர்!

ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சிகிச்சைக்கு பின்னர் மானை கோபனரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
 | 

படுகாயமடைந்த மானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டே ஓட்டுநர்!

ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

கோவை மாவட்டம் சின்னஜம்புஹண்டி குடியிருப்பு பகுதியில் பெண் மான் ஒன்று தெரு நாய்கள் தாக்கியதால் கழுத்து மற்றும் தொடை பகுதிகளில் படுகாயமடைந்து எழும்ப முடியாமல் கிடந்தது. இதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிங்கிரி, மானை மீட்டு உடனடியாக ஆனைகட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர், மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கோபனரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP