125 ரூபாய்க்காக நண்பரையே கொலை செய்த கொடூரம்!

சென்னையில் ரூ.125 கடனுக்காக நண்பரையே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

125 ரூபாய்க்காக நண்பரையே கொலை செய்த கொடூரம்!

சென்னையில் ரூ.125 கடனுக்காக நண்பரையே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோடையை சேர்ந்தவர் ராபர்ட். இவர் சென்னை கே.கே.நகர் சண்முகம் சாலையில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தார். இவருடன் இவரது நண்பர் சிவகுமாரும் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.  ராபர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமாரிடம் ரூ.250 கடன் வாங்கியிருந்த நிலையில், அதில் ரூ.125 திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் 125 ரூபாய்க்காக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு இருவரும் குடிபோதையில் பண விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்டனர். அப்போது, ராபர்ட் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராபர்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராபர்ட்டை கொலை செய்த அவரது நண்பர் சிவகுமாரை கைது செய்த போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP