4 தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

4 தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக  மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " நடைபெறவிருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிடையும் என்றும், நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தான் பெறும் என்ற ஒரு நல்ல சூழல் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார். 

திமுக மற்றும் அமமுக கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி வைத்துள்ளார்கள்  என அப்போது இருந்தே கூறிவருகிறோம் என குறிப்பிட்டார். 

பாலியல் புகார் குறித்த  கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் உள்ளன. அதனை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP