ஸ்ரீரங்கம் தாயாருக்கு இசை இசைத்து வழிபாடு செய்த கோவில் யானை: ஆச்சர்யத்தில் பக்தர்கள்!

நவராத்திரியையொட்டி ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை பக்தர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
 | 

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி இரவு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. 

அதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாயார் சன்னதியில், ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத்ஆர்கன் வாசித்து கொண்டே  நடந்து சென்று வணங்கியதும் விழாவை மேலும் சிறப்பித்தது. கோவில் யானையின் இத்தகைய வியத்தகு செயலை ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP