மாணவி தற்கொலை: முகநூலில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் சரண்!

முகநூலில் அவதூறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் வெளியானதால் மனைமுடைந்த கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், புகைப்படத்தை வெளியிட்ட இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
 | 

மாணவி தற்கொலை: முகநூலில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் சரண்!

முகநூலில் அவதூறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் வெளியானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், புகைப்படத்தை வெளியிட்ட இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பதை சேர்ந்த  நீலகண்டன் - தெய்வானை தம்பதியரின் மகள் ராதிகா (22). இவர் கடலூர் தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் வீட்டிற்கு  அருகாமையில் உள்ள பன்னீர் செல்வத்தின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் ராதிகாவின் மாமன் மகன் விக்னேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்து கொண்டு, அவ்வப்போது பிரேம்குமாரும் அவரது  தந்தையும்  ராதிகாவுக்கு பலமுறை  மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார் தனது முகநூலில் ராதிகாவை பற்றி  அவதூறாக பதிவு செய்துள்ளார்.

இதனை முகநூலில் பார்த்ததும்,  அதிர்ச்சியடைந்த ராதிகா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மாமன் மகன் விக்னேஷ் (22) என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மந்தராகுப்பம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.

மாணவி தற்கொலை: முகநூலில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் சரண்!

புகார் அளித்து பல மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்றிரவு விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது பெரிய கற்களை வீசத் தொடங்கினர். இதில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் பலத்த காயமடைந்தார்.

மாணவி தற்கொலை: முகநூலில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் சரண்!

பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

இந்நிலையில், இருவரின் உயிரிழப்புக்கு காரணமான பிரேம் குமாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் இன்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, மாணவியை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட இளைஞர் பிரேம் குமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP