ஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி!

திருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி!

திருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் பொன்மலை செங்கற் உடையார் தெருவை சேர்ந்தவர் ராக்கி எமர்சன். இவரது மகள் ஏஞ்சலின் லெமோ (17) மேலப்புதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. ஏஞ்சலின் தனது தந்தையுடன் வந்திருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஏஞ்சலினை, வகுப்பு ஆசிரியைகள் தந்தையிடம் திட்டியதாக தெரிகிறது. அழுதுக் கொண்டே இருந்த ஏஞ்சலின், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென, பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP