சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

முருகனின் அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 | 

சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

முருகனின் அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஆடி கிருத்திகையை  முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார்.

மேலும் இன்று மாலை முருகன் மயில் வாகனத்தில் வீதி உலா வர உள்ளார். அதனைதொடர்ந்து தெப்பத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP