குழந்தையை காப்பாற்ற துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்!

குழந்தை சுர்ஜித் நலமுடம் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்படைப்போல நாமும் துடிக்கிறோம். குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். ட்வீட் குழந்தை நலமுடன் மீட்கப்படுவான்
 | 

குழந்தையை காப்பாற்ற துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக அவரது தாய் தனது கையால் துணிப்பையை தைத்து மீட்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளார். 

திருச்சியில் ஆழ்துளை கிணற்றி சிக்கியிருக்கும் குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. குழந்தை நலமுடம் மீட்கப்படுவதை எதிர்பார்த்து தமிழகமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தையை மீட்பதற்கு துணிப்பை தேவைப்படும் என்பதால் தயாராக்கும் படி மீட்பு குழுவினர் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்ட சுர்ஜித்தின் தாய் கலாமேரி அருகில் துணி தைப்பவர்கள் இல்லாததால், தனது குழந்தையை காப்பாற்ற தானே துணிப்பை தைத்து கொடுப்பதாக கூறி, குழந்தைக்காக துணிப்பையை வடிவமைத்து மீட்பு குழுவினரிடம் கொடுத்துள்ளார். தற்போது குழந்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP