உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்கது: வைகோ

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்கது: வைகோ

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரையில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அவர், 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்றும் இதில், மத்திய சட்டத் துறை அமைச்சருக்கும் பங்கிருப்பதாக கூறினார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் இருப்பதாகவும், திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  திருவாரூர், நாகை என ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்படும் எனவும் கூறினார். மேலும் மேகதாதுவில் அணை  கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை விற்கும் நிலைக்கு கொண்டுவர உள்ளதாகவும், அதனை அம்பானி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே பண்பாடு  என்ற ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படைக் கோட்பாட்டை நிறைவேற்றுவதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிப்பு, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு போன்றத் திட்டங்களை கொண்டு வருவதாக வைகோ குற்றம் சாட்டினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP